UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:05 AM
கோவை :
டாக்டர் பி.ஜி.வி., பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தினமலரின் பட்டம் இதழை படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் தமிழ் வாசிப்பு மற்றும் தமிழ் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பேசியதாவது:
கடந்த 2022 முதல், கடந்த நான்காண்டுகளாக எங்கள் பள்ளியில் தினமலர் பட்டம் நாளிதழை வாங்கி வருகிறோம். தினமலர் பட்டம் வாசிப்புக்கென தனியாக பூஜ்ஜிய பாடவேளை அமைத்து, ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பட்டம் நாளிதழை வாசிப்பதன் மூலம் மாணவர்கள் தமிழ் வாசிப்பு திறனையும், பொது அறிவையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள். மேலும், வகுப்புவாரியாக குழுக்களை அமைத்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது. இது மாணவர்களின் அறிவு திறனை அதிகரிக்கவும்,போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.