UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை, சர்தார் வல்லபாய் படேல் சர்வ தேச ஜவுளி மற்றும் மேலாண்மைக்கல்லூரி மாணவர்கள், காஸ் வன அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.
ஹோரேஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் பெயரிலான இந்த வன அருங்காட்சியகம், இந்தியாவில் மிகப்பெரிய, பழமையான வன அருங்காட்சியகங்களுள் ஒன்று.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தில், பதனம் செய்யப்பட்ட விலங்குகள், வெளிநாட்டுப் பறவைகள், வனப்பொருட்கள், வரலாற்றுக்கால வனவியல் உபகரணங்கள் ஆகியவற்றின் தொகுப்பு உள்ளது. சுற்றுச்சூழல், பல்லுயிர், வனப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

