UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:12 PM

சென்னை:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு, புதிய துணை வேந்தரை தேர்வு செய்வ தற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வகுமார், 2021 ஏப்., மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டு நிறைவு பெற்றது. அதன்பின், ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது; வரும் ஏப்., மாதத்துடன் முடிவடைகிறது.
புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், கவர்னரின் பிரதிநிதியாக, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழக துணை வேந்தரும், பல்கலை மானியக் குழு உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி, அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் சிகிச்சையியல் இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் தனபாலன், பல்கலையின் பிரதிநிதியாக பேராசிரியர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.