UPDATED : ஜன 23, 2026 01:22 PM
ADDED : ஜன 23, 2026 01:23 PM
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், இன்குபேசன் மையம், புதுமை அறிவுசார் சொத்துரிமை பிரிவு இணைந்து பல்வேறு கல்லுாரி மாணவர்களுக்கிடையே 2026ல், புதுமை முயற்சிகளுக்கான (இன்னோவேட்டர் அரீனா 2026) போட்டிகள் நடந்தன.
ஆராய்ச்சி மைய தலைவர் நிவேதா மார்ட்டின் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு, துணை முதல்வர் ராயப்பன் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மதுரை மண்டலத்தலைவர் காளியப்பன், அகமதாபாத் இ.டி.ஐ.ஐ., திட்ட அலுவலர் ஆனந்தசேகர், தியாகராஜர் கல்லுாரி ஆராய்ச்சி மேம்பாட்டுத் தலைவர் பிரகாஷ், கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி உதவி பேராசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற 70 அணிகளில் சிறந்த புதுமை முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் அமல்ராஜ், ஜஸ்டின் டேவிட், ரேவதி ஒருங்கிணைத்தனர்.

