தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி முகாம்

அரசு கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி முகாம்

அரசு கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி முகாம்


UPDATED : அக் 03, 2026 11:52 AM

ADDED : அக் 03, 2026 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 11:52 AM ADDED : அக் 03, 2026 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
கல்லுாரி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து, நாமக்கல்லில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி கணிதத் துறை சார்பில், சி.எஸ்.ஐ.ஆர்., நெட், டி.என்., செட் மற்றும் டி.ஆர்.பி., போட்டித் தேர்வுகளுக்கான, மாநில அளவிலான 2 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

கணிதத் துறை தலைவர் கணேசன் வரவேற்றார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கணித பாடத்தை எளிமையாக கற்று போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து, பல்வேறு உத்திகள் மற்றும் பாடம் சார்ந்த பயிற்சி முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

இரண்டாம் நாள் பயிற்சியில் பேராசிரியர் சிவகுமார் வரவேற்றார். மதுரை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் பேராசிரியர் ஞானப்பிரகாசம் பேசினார். முகாமில், 23 கல்லுாரிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். 2 நாட்கள் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி முதலிடம், சேலம் ஸ்ரீ சாரதா கல்லுாரி 2ம் இடம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி 3ம் இடம் பெற்றன. முகாமை கணிதத் துறை பேராசிரியர்கள் வடிவேல், விஜயலட்சுமி, சாந்தி, சித்ரா, தமிழரசி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us