தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஆர்.எஸ்., கல்லுாரி மாணவர்கள் மின் வாகனம் உருவாக்கி சாதனை

வி.ஆர்.எஸ்., கல்லுாரி மாணவர்கள் மின் வாகனம் உருவாக்கி சாதனை

வி.ஆர்.எஸ்., கல்லுாரி மாணவர்கள் மின் வாகனம் உருவாக்கி சாதனை


UPDATED : அக் 03, 2026 11:54 AM

ADDED : அக் 03, 2026 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 11:54 AM ADDED : அக் 03, 2026 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் புதிய எப்.1 மின் வாகனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கல்லுாரியில் 'மின்சார வாகன வடிமைப்பு மற்றும் மேம்பாட்டு செயல்முறை திட்டம்' தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கு நடந்தது. பயிலரங்கிற்கு கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார்.

பெங்களூரு கேப்பபிள் இந்தியா ஈவி சிஸ்டம்ஸ் பொறியாளர் நிமித், ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் அன்வித் சங்கர் ஆகியோர், மின்சார வாகனங்களின் வடிமைப்பு, அதன் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி, விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சி முகாமில், கல்லுாரியை மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர்.

இந்த மாணவர்கள் ஒன்றிணைந்து புதிதாக எப் 1 மின் வாகனத்தை நேர்த்தியாக வடிவமைத்து உருவாக்கி கல்லுாரி வளாகத்திலே சோதனை ஓட்டம் செய்து காட்டினர்.

எதிர்காலத்தில் இது போன்ற மின் வாகனங்கள் விவசாய நிலங்களில் உரமிடுதல், ஏறு உழுதல் ஆகிய பணிகளை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு டீசல் செலவு பெருமளவு குறையும். பயிற்சி நிறைவில், சிறப்பாக பங்கேற்று வாகனத்தை வடிமைத்த 60 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us