10 வயதில் ஹிந்தி தேர்வுகள் நிறைவு செய்து சிறுவன் சாதனை
10 வயதில் ஹிந்தி தேர்வுகள் நிறைவு செய்து சிறுவன் சாதனை
UPDATED : செப் 19, 2024 12:00 AM
ADDED : செப் 19, 2024 09:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில், ஹிந்தி தேர்வு முழுமையாக எழுதி, 10 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
பொள்ளாச்சி கார்மல் ஜோதி சிஎம்ஐ பப்ளிக் பள்ளியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் நந்தா பிரணவ். இவர், ஹிந்தி படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.சென்னை தக் ஷினா பாரத் ஹிந்தி பிரசார் சபா நடத்திய, பிரவின் உத்தராத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இவர், ஹிந்தி மொழி தேர்வு அனைத்தும் எழுதி, தென்மாநில அளவில் குறைந்த வயதில் வெற்றி பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

