நாம் செய்யும் வேலைக்கு ஒரு அவுட்புட் இருக்கணும்; அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
நாம் செய்யும் வேலைக்கு ஒரு அவுட்புட் இருக்கணும்; அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
UPDATED : செப் 19, 2024 12:00 AM
ADDED : செப் 19, 2024 09:04 AM
கோவை :
நாம் செய்யும் வேலைக்கு ஒரு நல்ல அவுட்புட் இருக்கணும், அப்போது தான்அரசுதிட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெறும், என்று கலெக்டர் கிராந்திகுமார் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
இம்முகாமில் பங்கேற்கும் அதிகாரிகள், மக்களது பிரச்னைகள் அந்த துறை சார்ந்தது, இந்த துறையை சார்ந்தது என்று ஒதுங்கிக்கொள்ளக்கூடாது.ஒவ்வொரு துறையும் ஒரு துறையோடு, ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்கும்,
அதனால் மக்களது பிரச்னையை, அதிகாரிகள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கோவை வடக்கு தாலுகா, கோவை மாவட்டத்தின் முக்கியமான பெரிய தாலுகா. இதில் கோவை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மலைகிராமங்கள், கேரள எல்லைப்பகுதிகள் உள்ளன.
அங்கு நுழையும் போது ஏராளமான பிரச்னைகளை பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு. சிதிலமடைந்த கட்டடங்கள்,பயன்படுத்தாத கட்டடங்கள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் குறித்து கண்டறிய வேண்டும்.நாம் செய்யும் வேலைக்கு ஒரு நல்ல அவுட்புட் இருக்க வேண்டும்.
அப்போது தான் அரசின் நல்ல திட்டங்கள், மக்களிடம் வரவேற்பை பெறும். அதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஒவ்வொருவரும் சிறப்பாக பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

