UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
மாநில அளவிலான டெட்லிப்ட் போட்டி திருச்சியில் நடந்தது. இதில் ஜூனியர், சீனியர்.சப் ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
சென்னை,கோவை, திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கு மேலான போட்டியாளர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர் மகாராஜன் ஜூனியர் 77 கிலோ எடை பிரிவு போட்டியில் பங்கேற்று 3ம் பரிசு பெற்றார்.
திண்டுக்கல்லுக்கு வந்த இவருக்கு பஸ் ஸ்டாண்டில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.