UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:22 AM
கள்ளக்குறிச்சி:
கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் குறள் மனம் விருது வழங்கும் விழா மற்றும் திருக்குறள் சொற்பொழிவு நடந்தது.
விழாவிற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். சின்னப்பத்தமிழர், சவுந்தரராஜன், சங்கர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் புகழேந்தி வரவேற்றார். பேரவைச் செயலாளர் லட்சுமிபதி, ராபியா பேகம் தமிழர்தம் பெருமை சொல்லவும் பெரிதே, திருக்குறள் அதிகாரம் செய்ந்நன்றியறிதல் விளக்கவுரை குறித்து சொற்பொழிவாற்றினர்.
இணைச் செயலாளர் மகேந்திரன், ராமானுஜம் ஆகியோர் விருது பெறுவோருக்கான தகுதி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் சஞ்சீவிராயணன், பொறியாளர் வரதராஜன் ஆகியோருக்கு குறள் மனம் விருது வழங்கப்பட்டது.
கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரதராசனார், தமிழ்ப் பேரவை அமைப்பின் தலைவர் அனந்தசயனம் ஆகியோர் விருது வழங்கினர். கலால் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் பொற்கிழி வழங்கினார்.
தமிழ் சங்க செயலாளர் பழமலை, பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன், சங்க துணைத் தலைவர் அம்பேத்கர் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டி பேசினர். நிகழ்ச்சிகளை சங்க செயலாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார்.
கஸ்துாரி இளையாழ்வார் நன்றி கூறினார்.