தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ.,க்கு 16ல் கலந்தாய்வு

எம்.பி.ஏ.,க்கு 16ல் கலந்தாய்வு

எம்.பி.ஏ.,க்கு 16ல் கலந்தாய்வு


UPDATED : செப் 07, 2026 10:09 PM

ADDED : செப் 07, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:09 PM ADDED : செப் 07, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையில் 2026 - 27ம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ., காலியிடங்களை நிரப்ப, வரும் 16ல் நேரடி கலந்தாய்வு நடக்கிறது.

சுயநிதிப் பிரிவில் காலியாக உள்ள இடங்கள், டான்செட் - 2026 மதிப்பெண் அடிப்படையில், பல்கலையின் 'பாரதியார் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு என்டர்பிரனர்ஷிப் டெவலப்மென்ட்' மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான கலந்தாய்வு 16 காலை 10:00 மணிக்கு, பி.எஸ்.எம்.இ.டி., வளாகத்தில் நடக்கிறது. டான்செட்- 2026 விதிகளின்படி, தகுதி பெற்றவர்கள் தேவையான ஆவணங்களுடன், மதியம் 12:00க்குள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அன்றைய தினமே நிர்ணயிக்கப்பட்ட முழு கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விவரங்களுக்கு 0422 - 2428275.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us