அரசு டாக்டர்களின் எதிர்ப்பால் கலந்தாய்வு ஒத்திவைப்பு
அரசு டாக்டர்களின் எதிர்ப்பால் கலந்தாய்வு ஒத்திவைப்பு
UPDATED : அக் 16, 2025 03:38 PM
ADDED : அக் 16, 2025 03:39 PM
சென்னை:
மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில், நேற்று நடக்கவிருந்த அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு, டாக்டர்கள் எதிர்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர், முதுநிலை உறைவிட மருத்துவர், இளநிலை உறைவிட மருத்துவர், பயிற்றுனர் பணியிடங்களுக்கான சிறப்பு பணியிட கலந்தாய்வு நேற்று நடப்பதாக இருந்தது.
ஆனால், பல ஆண்டுகளாக அரசு சேவையில் உள்ள, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், சமீபத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக நியமிக்கப்பட்ட, இளநிலை மருத்துவ அலுவலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்க செயலர் அகிலன் தலைமையில், அரசு டாக்டர்கள், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
டாக்டர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, மருத்துவ கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, சிறப்பு கலந்தாய்வை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.