நுகர்வோர் உரிமைகள் தின விழா மாணவ, மாணவியருக்கு பரிசு
நுகர்வோர் உரிமைகள் தின விழா மாணவ, மாணவியருக்கு பரிசு
UPDATED : ஜன 31, 2026 10:58 AM
ADDED : ஜன 31, 2026 10:59 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் கடமைகள், துரித உணவுகள் உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து உணவு பொருள் வீணாவதை தடுத்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்து கொள்ளல் என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டி போன்றவை நடந்தது.
இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
