தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


UPDATED : ஜன 31, 2026 10:58 AM

ADDED : ஜன 31, 2026 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2026 10:58 AM ADDED : ஜன 31, 2026 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மங்களூர் வட்டார அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மணிவேல் வரவேற்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ரூ., 10 லட்சத்தில் கட்டப்பட்ட விழா மேடையை திறந்து வைத்தார். தொடர்ந்து, 71 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கினார்.

வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார், விருத்தாசலம் தி.மு.க., ஒன்றிய செயலர் வேல்முருகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சேகர், திருவள்ளுவன், ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமைச்சர் கணேசன் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் இரு மடங்கு புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்கி, நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, படிப்பு முடிவதற்குள் வேலை கிடைத்துவிடும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us