UPDATED : டிச 18, 2025 07:51 AM
ADDED : டிச 18, 2025 07:52 AM
புதுச்சேரி:
புதுச்சேரி, சுதேசிமில் அருகில், அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 30 கவுரவ விரிவுரையாளர்கள், 20 கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், 61 கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள் மற்றும் 165 கவுரவ பாலசேவிகாகளை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சேஷாச்சலம்,புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் தலைவர் பாலகுமார், தலைமையாசிரியர் சங்க தலைவர் சிரில் நிக்கோலஸ், துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பொற்செழியன், விரிவுரையாளர் சங்க தலைவர் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ராமதாஸ், துவக்கப் பள்ளி நலச்சங்க தலைவர் மோகன்தாஸ், பொதுச்செயலாளர் ஜனார்தனன் மற்றும் காரைக்கால் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

