கல்லுாரி முன்பாக அடிக்கடி விபத்து எச்சரிக்கை அறிவிப்பு அவசியம்
கல்லுாரி முன்பாக அடிக்கடி விபத்து எச்சரிக்கை அறிவிப்பு அவசியம்
UPDATED : டிச 18, 2025 07:49 AM
ADDED : டிச 18, 2025 07:51 AM
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி முன்பாக வாகனங்கள் நின்று செல்ல அகலப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு அடுத்து குறுகியதாக மாறிவிடுகிறது.
அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் கடந்த ஆகஸ்டில் மாணவர்கள் வேகத்தடை அமைக்க கோரி மறியலில் ஈடுபட முயன்றனர். ரோட்டின் மையப்பகுதியில் பேரிகார்டு தடுப்புகளை போலீசார் வைத்துள்ளனர்.
தடுப்புகள் அமைந்துள்ள பகுதி அகலமான ரோடு போல பார்வைக்கு தென்பட்டாலும், அருகில் வாகனங்கள் செல்லும் போது குறுகியதாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுப்புகள் முடியும் இடத்தில் முன்னே செல்லும் வாகனங்களை முந்த ரோட்டின் மையப்பகுதியை தாண்ட முற்படுவதால் எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வாகனங்களின் வேகத்தை கட்டுப் படுத்தவும், 'விபத்துப்பகுதி' என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

