தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா


UPDATED : செப் 14, 2026 12:30 PM

ADDED : செப் 14, 2026 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 12:30 PM ADDED : செப் 14, 2026 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு:
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரி மற்றும் விவேகானந்தா மகளிர் மேலாண்மை கல்லுாரி அகியவற்றின் பட்டமளிப்பு விழா, விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின், சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது.

மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி, இணை மேலாண்மை இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகநிதி, துணை தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர்கள் விஜயகுமார், தேவி, மேலாண்மையியல் கல்லுாரி இயக்குனர் மோகன சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினரான, சென்னை - தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உஷா நடேசன், இளங்கலை, முதுகலை படிப்புகளில் பல்கலை தரவரிசையில் இடம் பிடித்த, 27 பேருக்கு பதக்கங்களையும், 978க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்.

விழாவில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், அட்மிஷன் நிர்வாகி சவுண்டப்பன், தேர்வாணையாளர் கண்ணன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், வேலைவாய்ப்பு நிர்வாகி சரவணன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us