வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
UPDATED : நவ 02, 2026 05:53 PM
ADDED : நவ 02, 2026 05:54 PM
ஈரோடு:
ஈரோடு திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில், நான்காவது பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில், 2022 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவ, மாணவியர், 707 பேர் பட்டம் பெற்றனர். சிறப்பு விருந்தினராக சென்னை சொனாட்டா சாப்ட்வேர் நிறுவன மனித வளத்துறை தலைவர் பிரகாஷ் நடராஜன், விழா பேருரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் விழாவை தொடங்கி வைத்தார். பாரதியார் பல்கலை தேர்வுகளில், 37 பேர் தரவரிசை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறப்பு விருந்தினர் பிரகாஷ் நடராஜன் தனது உரையில், மாணவர்கள் தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொண்டு சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழாவில் வேளாளர் கல்வி அறக்கட்டளை இணை செயலாளர்கள் நல்லசாமி, ராசமாணிக்கம், செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, பாம்பண்ணன், அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியன், யுவராஜா மற்றும் கல்லுாரி முதல்வர் நல்லசாமி, நிர்வாகிகள், ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
