தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய மேலாண்மை கல்லுாரியில் ஏ.ஐ., குறித்து சிறப்பு பயிலரங்கு

தேசிய மேலாண்மை கல்லுாரியில் ஏ.ஐ., குறித்து சிறப்பு பயிலரங்கு

தேசிய மேலாண்மை கல்லுாரியில் ஏ.ஐ., குறித்து சிறப்பு பயிலரங்கு


UPDATED : நவ 02, 2026 05:54 PM

ADDED : நவ 02, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 05:54 PM ADDED : நவ 02, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:
பெருந்துறை நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லுாரியில், தணிக்கையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த சிறப்பு பயிலரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளரான கோவை ஐ.சி.ஏ.ஐ., தென்னிந்திய பிராந்திய குழு தலைவர் சூர்யஜித் பேசினார். பட்டயக் கணக்காளர் துறையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் மேம்பட்ட பயன்பாடுகள் மற்றும் தணிக்கைப் பணிகளில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டு, தங்களது தொழில் முறை திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பட்டயக் கணக்காளர், செப்டம்பர் மாதம் நடந்த தேர்வில், தகுதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. பயிலரங்கு ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us