தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : பிப் 06, 2026 01:34 PM

ADDED : பிப் 06, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 01:34 PM ADDED : பிப் 06, 2026 01:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் 26வது பட்டமளிப்பு விழா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.

தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகையில் , 'மாணவிகள் தான் கற்ற கல்வியால் பல்வேறு துறைகளில் சாதித்தும், சுய தொழில்களில் சாதனை செய்திட வேண்டும்., நாட்டின் கலாச்சாரத்தை கடைப்பிடித்து உளவியல் ரீதியான பிரச்னைகளையும் சவால்களையும் தாண்டி வாழ்க்கையில் தெளிவான முடிவுகளை எடுத்து இலக்கை அடைய வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்', என்றார்.

இளங்கலை பிரிவில் 238, முதுகலை பிரிவில் 38 என மொத்தம் 276 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், பொன்ராம், சக்திவேல், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us