தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குளுனி திறன் மையத்தில் 2வது பட்டமளிப்பு விழா

குளுனி திறன் மையத்தில் 2வது பட்டமளிப்பு விழா

குளுனி திறன் மையத்தில் 2வது பட்டமளிப்பு விழா


UPDATED : நவ 12, 2026 02:24 PM

ADDED : நவ 12, 2026 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:24 PM ADDED : நவ 12, 2026 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
குளுனி திறன் மேம்பாட்டு மையத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பயிற்சி முடிந்த மாணவிகளுக்கு பட்டம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஒயின் டவுன் துய்மா வீதி எண் 14-ல் குளுனி திறன் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் ஓராண்டு தொழிற்கல்வி பயிற்சியை நிறைவு செய்த 26 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக வரதட்சணை ஒழிப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார், பாண்டிச்சேரி ஆன்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கிளாடின் குணசேகர், மாகாணத் தலைவி லோரெய்ன் மற்றும் அருட்சகோதரி பிரிட்ஜித், பாதிரியார் இயேசுராஜ் பட்டம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இம்மையம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஸ்கில் இந்தியா அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வருகிறது. உள்ளூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எவரும் சேரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி திட்டங்கள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும் நிதி சார்ந்த சுயசார்புக்கும் பாலமாக அமைந்துள்ளன.

இம்மையத்தில் அனிமேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, பொது மருத்துவ உதவியாளர், தையல் மற்றும் ஆரி வேலைப்பாடு, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சிகளின் முடிவில் செய்முறைப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான முழு உதவிகளும் மாணவர்களுக்கு உறுதி செய்யப்படுகின்றன என மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us