UPDATED : நவ 12, 2026 02:24 AM
ADDED : நவ 12, 2026 02:24 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிளை விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., கடந்த ஆண்டு 9ம் வகுப்பு பயின்ற 83 மாணவர்களுக்கு சைக்கிளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
