UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 11:17 AM

சென்னை:
பிளஸ் 2 மறுகூட்டல், விடைத்தாள் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும், 9ம் தேதி முதல், https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், பிறந்த தேதி, பதிவெண் பயன்படுத்தி பதிவிறக்கலாம்
* விடைத்தாளில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பம், மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை, தேர்வு மையங்கள் வழியே, இன்று முதல், 11ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
* மறுமதிப்பீடு தேவை என்றால், விடைத்தாள் நகல் கட்டாயம் பெற வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பாடத்துக்கு, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ செய்து கொள்ளலாம்
* விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் போன்ற விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில், அல்லது தேர்வு மையங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.