UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:31 AM
சிவகங்கை:
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் துவங்குகிறது என முதல்வர் கே.சுடர்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இக்கல்லுாரியில் நாளை (மே 28) அன்று சிறப்பு பிரிவுகளான மாற்றுத்திறனாளி, விளையாட்டு பிரிவு, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஜூன் 10ல் அறிவியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 11ல் கலைப்பாடப்பிரிவுக்கும், ஜூன் 12ல் தமிழ், ஆங்கில பாடப் பிரிவுக்குமான மாணவிகள் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும்.
கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, நிரந்தர ஜாதி சான்று, வருமான சான்றுகள் அசலுடன் தலா 3 நகல் எடுத்து வர வேண்டும். அத்துடன் 2 பாஸ் போர்ட் சைஸ்போட்டோ எடுத்து வரவும். சிறப்பு பிரிவு மாணவிகள் மூலச்சான்று மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். பாடப்பிரிவு வாரியாக கட்டண விபரங்கள் கல்லுாரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும், என்றார்.