UPDATED : ஆக 08, 2026 05:27 PM
ADDED : ஆக 08, 2026 05:28 PM
அ நிறம் | அளவு
கோவை:
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக இருந்த அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துாய்மை பணியாளர், மசால்ஜி, கார்டனர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தில் காலியாகவுள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு 95 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது.
