UPDATED : ஜூன் 23, 2026 10:51 AM
ADDED : ஜூன் 23, 2026 10:54 AM
மதுரை:
மதுரை மேலூரில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் டி.இ.ஓ., தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) ரூபி, கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., பேசுகையில், வகுப்பறைகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் தினம் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதை பெற்றோரிடம் தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளி ஆய்வுக்கு செல்லும் பி.இ.ஓ.,க்கள் ஒன்றுமுதல் 3ம் வகுப்பு வரை மாணவர்களின் புத்தக பயன்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மேலூர் ஒன்றியத்தில் உள்ள 64 ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலைக்கான (ஸ்பெஷல் கிரேடு) உத்தரவுகளை டி.இ.ஓ., வழங்கினார்.
