மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
UPDATED : ஜூன் 23, 2026 10:54 AM
ADDED : ஜூன் 23, 2026 10:56 AM
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் 2 நாள் 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி' நடந்தது.
கருத்தரங்கை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி துவக்கி வைத்தனர். மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்தி வழங்கினார்.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் மேலாண்மையியல் துறை உதவிப் பேராசிரியர் விசாலாட்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை பேராசிரியர்கள் செல்வி, இலக்கியா, ஐஸ்வர்யா ஆகியோர் 'ஜி.எஸ்.டி., மற்றும் அதன் பயன்பாடுகள்' தலைப்பில் ஜி.எஸ்.டி.,யின் அடிப்படைக் கொள்கைகள், வணிகத் துறையில் அதன் முக்கியத்துவம், வரி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, 'தரவுப் பகுப்பாய்விலிருந்து வணிக நுண்ணறிவு வரை' என்ற தலைப்பில் தரவுப் பகுப்பாய்வு, அறிக்கைத் தயாரிப்பு, தரவுகளின் காட்சிப்படுத்தல் மற்றும் வணிக முடிவெடுப்பில் பவர் பி.ஐ., கருவியின் பயன்பாடு குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லுாரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் ஜானகி ரமா மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
