UPDATED : அக் 17, 2026 04:34 PM
ADDED : அக் 17, 2026 04:34 PM
சிவகாசி:
சிவகாசி அய்யனார் காலனியில் 34 ஆண்டுகளுக்கு துவங்கிய இப்பள்ளி இன்று பழைய தாயில்பட்டி ரோட்டில் மிக பிரம்மாண்டமான கட்டடத்தில் பிரி.கே.ஜி., வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். எங்கள் பள்ளியில் அரசு அறிவித்துள்ள கட்டணத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் ஸ்மார்ட் கிளாஸ் கல்வி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கணினி கல்வி, ஹிந்தி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. யோகா, நடனம், இசை, ஓவியம், சிலம்பம், தொழிற்கல்வி கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் 1 முதல் 5ம் வகுப்புவரை அபாகஸ் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவு கணிதமும் கற்று தரப்படுகிறது.
கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்டிங், டேக்வாண்டோ, கராத்தே, கோ-கோ, டேபிள்டென்னிஸ், கேரம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகள் சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி, குத்துச்சண்டை ஜிம்னாஸ்டிக் போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மேற்படிப்பில்.சேர்வதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் நீட்,, ஜெ.இ.இ., ஜெ.இ.இ., அட்வான்ஸ்ட், நடத்தப்படுகிறது பல்வேறு சிறப்புகளை பெற்று சாத னையாளர்களை உருவாக்கி வருகிறோம்.
- அ.ஞானசேகரன், பள்ளி தாளாளர்.
