sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'கிரிட்டிக்கல் கேர்' படிப்புகள்

'கிரிட்டிக்கல் கேர்' படிப்புகள்

'கிரிட்டிக்கல் கேர்' படிப்புகள்


UPDATED : மே 27, 2026 09:04 AM

ADDED : மே 27, 2026 09:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2026 09:04 AM ADDED : மே 27, 2026 09:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவத் துறையில் மிகுந்த பொறுப்பும், சவாலும் கொண்ட பிரிவுகளில் ஒன்றாக 'கிரிட்டிக்கல் கேர்' துறை கருதப்படுகிறது. விபத்து, இதய நோய், சுவாசக் கோளாறு, தீவிர தொற்று போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளில் இருக்கும் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிப்பதே இத்துறையின் முக்கிய பணி.

பிரதான பணிகள்

* நோயாளியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தல்
* சுவாசக் கருவிகள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இயக்குதல்
* அவசரநிலை சிகிச்சையில் உதவுதல்
* மருத்துவருடன் இணைந்து ஐ.சி.யு.,வை பராமரித்தல்

படிப்புகள்


பி.எஸ்சி.,- கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி - 3 முதல் 4 ஆண்டுகள் வரை
டிப்ளமா இன் கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி - ஓர் அண்டு முதல் 2 ஆண்டுகள் வரை
பி.ஜி., டிப்ளமா இன் கிரிட்டிக்கல் கேர் - 2 ஆண்டுகள் வரை
சர்ட்டிபிகேட் கோர்சஸ் இன் கிரிட்டிக்கல் கேர் மற்றும் குறுகிய கால திறன் மேம்பாட்டு படிப்புகள் - 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை

தகுதி


குறைந்தது 12ம் வகுப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். செவிலியர்கள், சுகாதார மற்றும் மருத்துவ துறை பணியாளர்களும் இப்படிப்புகளை படிக்கலாம்.

கற்றுக்கொள்ளப்படும் திறன்கள்

* ஐ.சி.யு., கருவிகளை கையாளுதல்
* மேம்பட்ட முறையில் நோயாளிகளை கவனித்தல்
* இதயத்தை கண்காணித்தல்
* அவசரகால செயல்முறைகள்
* நோய்த்தொற்றுத் தடுப்பு நடைமுறைகள்
* சுவாசக்கருவிகளை இயக்குதல்

இந்தியாவில் சிறந்த கல்லூரிகள்

* எய்ம்ஸ்
* கிரிஸ்டியன் மருத்துவக் கல்லூரி - சி.எம்.சி.,
* ஜிப்மர்
* அரசு மருத்துவசார் கல்லூரிகள்
மற்றும் பல்வேறு தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள்

தேவைப்படும் பண்புகள்


* அவசரநிலைகளில் செயல்படும் திறன்
* பொறுமை
* மனிதாபிமானம்
* மருத்துவத் துறையில் ஆர்வம்
* குழுவாக பணிபுரியும் திறன்

வாய்ப்புகள்


கொரோனா காலத்திற்கு பிறகு, ஐ.சி.யு., மற்றும் எமர்ஜென்சி கேர் போன்ற பிரிவுகளில் நிபுணர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதால், 'கிரிட்டிக்கல் கேர்' படிப்புகள் பிரபலமான தொழில் சார்ந்த படிப்பாக மாறியுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகள், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிரிட்டிக்கல் கேர் நிபுணர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us