UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:31 AM
சி.யூ.இ.டி., தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அஜய்:
தேர்வு மிக எளிதாக இருந்தது. பாடப்பிரிவு தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்த தேர்வு குறித்து பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் தகவல் தெரிந்து கொண்டேன்.
ஹர்சிதா:
இது போன்ற தேர்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாக உள்ளது. மத்திய பல்கலையில், சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக உள்ளது. நீட் தேர்வை போன்றே தான் உள்ளது. கேள்விகள் எளிதாக இருந்தது.
மிருத்திகா:
மொழி பாடப்பிரிவில் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. நீட் தேர்வுக்கு இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீட் தேர்வுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்வுகள் எளிதாக இருந்தது. கூடுதல் நேரம் ஒதுக்கினால் இன்னும் எளிதாக இருக்கும்.
ரோஹித் சர்மா:
டெல்லியில் உள்ள பல்கலையில் சேர்வதே எனது லட்சியம்; அதற்காகவே இந்த தேர்வை எழுதினேன். கேள்விகள் நீட் தேர்வுடன் ஒப்பிடுகையில் மிக எளிதாக இருந்தது.
தாரணி:
வேதியியல், ஆங்கிலம் சுலபமாக இருந்தது. நீட் தேர்வை விட எளிதாக உள்ளது. இரண்டு தேர்வுகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை. பொதுவான வகையில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.

