தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சைக்கிள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சைக்கிள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சைக்கிள்


UPDATED : செப் 30, 2026 11:24 AM

ADDED : செப் 30, 2026 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 11:24 AM ADDED : செப் 30, 2026 11:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 2 மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதம் தொடங்க, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, நவீன வடிவமைப்பில் சைக்கிள்கள் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட எடை குறைவாகவும், உறுதியாகவும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இரவிலும், போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் ஒளிரும் வகையில், முன்பகுதி மற்றும் பின்பகுதியில் பிரதிபலிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட 'பிரேக் சிஸ்டம்' மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகையில், பெரிய 'கேரியர்' பொருத்தப்பட உள்ளது.

தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

சைக்கிள் வழங்கும் பணியை, டிசம்பர் மாத இறுதியில் தொடங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வாயிலாக சைக்கிள் கொள்முதலுக்கு 'டெண்டர்' கோரப்பட்டு இருந்தது. அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அக்டோபர் 13 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us