UPDATED : செப் 30, 2026 11:24 AM
ADDED : செப் 30, 2026 11:24 AM

பொறியியல் பட்டதாரிகள் இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்., 30ல் தொடங்குகிறது.
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி வகுப்புக்கான (டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்., 30 தொடங்கி, அக்., 29 நிறைவடைகிறது. பி.இ., பி.டெக்., எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்று திருமணம் ஆகாத ஆண்கள் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.56,400 உதவித்தொகை உண்டு. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வவர்கள் லெப்டினன்ட் பதவியில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:
https://joinindianarmy.nic.in/
