UPDATED : செப் 29, 2026 03:15 PM
ADDED : செப் 29, 2026 03:16 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 1ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இம்மாதத்திற்கான சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 1ம் தேதி நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனை துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் கேண்டிடேட் லாகின் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். இதன்மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
தகுதியும், விருப்பமும் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்களும் வரும் 1ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீஉதயம் டவர்ஸ், மாடூர் டோல் பிளாசா அருகுில், வீரசோழபுரம் (மேற்கு) பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பேறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
