தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளில் கியூட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 'கியூட்' தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான சூழ்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த மாதம் 24ம் தேதி விண்ணப்பம் வரவேற்றது. ஜூன் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு விதித்திருந்தது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த காலக்கெடுவை வரும் 20ம் தேதி வரை புதுச்சேரி பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.பி.ஏ., நுாலக அறிவியல் (எம்.லிப்) எம்.எட்., எம்.பி.எட்., எம்.எஸ்.டபுள்யூ., தியேட்டர் ஆர்ட்ஸ், எம்.வி.ஏ., எல்.எல்.எம்., பி.ஜி., டிப்ளமோ படிப்புகளில் சேர கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் www.pondiuni.edu.in/admissions - 2025 - 26 என்ற இணைய முகவரில் வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே தங்களின் பதிவை பூர்த்தி செய்ய முடியாத விண்ணப்பதாரர்களுக்கும் புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடங்களுக்கு தேவையான வினாத்தாள்கள், தகவல் கையேடு ஆகியவை பல்கலைக்கழக இணைய தளத்தில் கிடைக்கும். பொது, ஓ.பி.சி., (என்.சி.எல்.,), இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கும் 100 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இம்மாணவர்கள் கூடுதல் படிப்புகளில் விண்ணப்பிக்க ஒவ்வொரு படிப்பிற்கும் 50 ரூபாய் செலுத்த வேண்டும். மாற்றுதிறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம், கூடுதல் கட்டணம் இல்லை.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us