ஓராண்டு வேளாண் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஓராண்டு வேளாண் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
UPDATED : அக் 28, 2026 05:58 PM
ADDED : அக் 28, 2026 05:59 PM
கிருஷ்ணகிரி:
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் கீதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கம் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு கடந்த, 24ம் தேதி துவங்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க மேலும், 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டில் இரண்டு பருவங்கள். எந்த கல்வி படித்திருந்தாலும் சேரலாம். கல்வி கட்டணம், 25,000 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்து கடை, விதைக் கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் ஆகலாம். சுய வேலைவாய்ப்பு பெறலாம்.
மேலும் தொடர்புக்கு தலைவர் மற்றும் பேராசிரியர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம். உதவி பேராசிரியர் கோவிந்தன், 99422 79190, 73390 02390, உதவியாளர் சந்துரு 88380 10200, 63841 13306, இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை - 641 003. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி, 0422 - 6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
