தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக ஊடக தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது: ஊடகவியலாளர் சுகிதா பேச்சு

சமூக ஊடக தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது: ஊடகவியலாளர் சுகிதா பேச்சு

சமூக ஊடக தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது: ஊடகவியலாளர் சுகிதா பேச்சு


UPDATED : அக் 28, 2026 05:56 PM

ADDED : அக் 28, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:56 PM ADDED : அக் 28, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
'சமூக ஊடக தொழில்நுட்பத்தை அதன் சமகால வசதியை தவிர்க்க முடியாது' என திண்டுக்கல் 5ம் நாள் புத்தகத் திருவிழாவில் ஊடகவியலாளர் சுகிதா பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.

5ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு மகளிர் சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது. இலக்கிய களத்தின் துணைத்தலைவர் சந்திரா தலைமை வகித்தார். பயிற்சி கலெக்டர் திவ்யலட்சுமி முன்னிலை வகித்தார். 'பெண்கள் ஏன் கண்களுக்கு தெரிவதில்லை' என்ற தலைப்பில் கவிஞர் ரேவதி முகில் சிறப்புரை ஆற்றினார்.

மதியம் 2:00 மணிக்கு கிறிஸ்டோ டோமிஸின் 'உள்ளொழுக்கு' என்ற உலகத் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிந்தனையரங்கம் நடந்தது. ஒரே நாளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் 9718 பேர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

மாலை நடந்த சிந்தனை அரங்கத்திற்கு இலக்கிய களத்தின் இணைச்செயலாளர் பாலசுந்தரி தலைமை வகித்தார். மாவட்ட திறன் அலுவலர் பவித்ரா வரவேற்றார். சிறப்பு தாசில்தார் சுகந்தி, மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் ரேவதி வாழ்த்தி பேசினர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் மோகனா முன்னிலை வகித்தார்.

ஊடகவியலாளர் சுகிதா பேசுகையில், 'சமூக ஊடக தொழில்நுட்பத்தை அதன் சமகால வசதியை தவிர்க்க முடியாது. அதேநேரத்தில் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவமாக இருந்து அதனை சமூக ஊடகங்களில் கொண்டுவந்தால் பிரச்னை இல்லை.

அதை தவிர்த்து சோசியல் மீடியா இன்ப்யூயர்சராக மட்டும் இருப்பது ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும். நிபுணத்துவத்திற்கான வெளிச்சம் பாய்ச்சும் கருவியாகவே சமூக ஊடகங்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

பேராசிரியர் முத்துலட்சுமி நன்றி தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us