தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : நவ 17, 2026 05:59 PM

ADDED : நவ 17, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:59 PM ADDED : நவ 17, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்க, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது; நடப்பாண்டுக்கான தேர்வு டிச., 12ம் தேதி நடத்தப்பட உள்ளது.

தேர்வெழுத விருப்பமுள்ள மாணவ, மாணவியர் தேர்வுத் துறையின் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நவ., 13க்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் வசதிக்காக, நவ., 25 வரை அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us