தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுத்தறிவு திட்ட தேர்வு பயிற்சி பெற்றவர் ஆர்வம்

எழுத்தறிவு திட்ட தேர்வு பயிற்சி பெற்றவர் ஆர்வம்

எழுத்தறிவு திட்ட தேர்வு பயிற்சி பெற்றவர் ஆர்வம்


UPDATED : நவ 17, 2026 06:00 PM

ADDED : நவ 17, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:00 PM ADDED : நவ 17, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 14 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு அற்றவர்களுக்கு தினசரி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி பெற்றவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மாவட்டம் முழுதும், 506 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்பது, எழுத்தறிவு இல்லாமல் கைரேகை மட்டுமே வைத்து வருபவர்களை எழுதப் படிக்க வைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இதன்படி, எழுத்தறிவற்றவர்களுக்கு தினசரி பயிற்சி வழங்கப்பட்டு, தேர்வும் நடத்தப்படுகிறது. இவ்வாறு, நடப்பு ஆண்டுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us