தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடல் தாமரை புத்தக பூங்கா திறப்பு விழாவை மிஸ் செய்தது வருத்தம்

கடல் தாமரை புத்தக பூங்கா திறப்பு விழாவை மிஸ் செய்தது வருத்தம்

கடல் தாமரை புத்தக பூங்கா திறப்பு விழாவை மிஸ் செய்தது வருத்தம்


UPDATED : மார் 09, 2026 11:50 AM

ADDED : மார் 09, 2026 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2026 11:50 AM ADDED : மார் 09, 2026 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
“கடல் தாமரை புத்தக பூங்கா நுாலக திறப்பு விழாவை, மிஸ் செய்தது இன்னும் வருத்தமாக உள்ளது,” என்று, ஆசிரியை நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள தினமலர் அலுவலக கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றும், நந்தினி செந்தில் குமார் நேற்று வந்தார். நுாலகத்தில் உள்ள தமிழ் புத்தகங்களை ஆர்வமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பின், அவர் கூறியதாவது:


கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் திறப்பு விழாவில் பங்கேற்க, எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் வர முடியவில்லை. திறப்பு விழாவை மிஸ் செய்தது இன்னும் வருத்தமாக உள்ளது. புத்தக பூங்காவில் நிறைய புத்தகங்கள் உள்ளன. அருமை… அருமை... வார்த்தைகளால் சொல்ல வரி இல்லை.

பெங்களூரு தமிழ் சங்க நுாலகத்திற்கு பின், அதிக தமிழ் புத்தகங்களை பார்த்தது இங்கு தான். ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர், குறுக்கெழுத்து புதிர் நாளிதழில் எனக்கு மிகவும் பிடிக்கும். நுாலகம் சூப்பராக உள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

மெம்பர்ஷிப் முறையும் கொண்டு வந்தால் நல்லது. மஹாதேவபுராவில் வசிக்கிறேன். எப்படியாவது இன்று நுாலகத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்று வந்து விட்டேன். வந்து, செல்ல 30 கி.மீ., துாரம் வரை பயணிக்க வேண்டும். இருந்தாலும் புத்தக பூங்காவுக்கு வந்த திருப்தியுடன் பயணிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us