தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் பதிவு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வலியுறுத்தல்

மாணவர் பதிவு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வலியுறுத்தல்

மாணவர் பதிவு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வலியுறுத்தல்


UPDATED : செப் 11, 2026 05:18 PM

ADDED : செப் 11, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 05:18 PM ADDED : செப் 11, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
இளநிலை மருத்துவம் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை மாணவர்களுக்கு பதிவு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கவர்னர், முதல்வர் அனுப்பியுள்ள மனு:

இளநிலை மருத்துவம் எம்.பி.பி.எஸ்., சென்டாக் 2ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான பதிவு கட்டணம் நேற்று மாலை 05:00 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பிற்கு பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்களின் கட்டணங்கள் சரியாக சென்டாக் வங்கியின் கணக்கில் சேராததால் இது தொடர்பாக மாணவர்கள் சென்டாக் அமைப்பிடம் முறையிட்டதின் காரணமாக நாளை 12ம் தேதி மாலை 03:00 மணி வரை வங்கி கணக்கில் செலுத்தாத மாணவர்களுக்கு காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2ம் கட்ட கலந்தாய்வில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெறவுள்ள 124 மாணவர்கள் வரும் 18ம் தேதி மாணவர் சேர்க்கை நடப்பதால், வரும் 18ம் தேதி வரை பதிவு கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us