UPDATED : ஜன 28, 2026 12:14 PM
ADDED : ஜன 28, 2026 12:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் சேதமடைந்து வருவதால் மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கல ஒன்றியம் காவனுார் ஊராட்சி நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடத்தில் கூரை சேதமடைந்து சிமென்ட் சிலாப்புகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால், மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

