தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாநில நிதியில் ஆசிரியர் சம்பளம் தர கோரிக்கை

மாநில நிதியில் ஆசிரியர் சம்பளம் தர கோரிக்கை

மாநில நிதியில் ஆசிரியர் சம்பளம் தர கோரிக்கை


UPDATED : அக் 05, 2024 12:00 AM

ADDED : அக் 05, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2024 12:00 AM ADDED : அக் 05, 2024 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என காரணம் கூறி, தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கை:



ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி, பள்ளி கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் என 32,500 பேருக்கு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை, தமிழக அரசு வழங்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன.

தனியார் நிறுவனம் நடத்திய கார் பந்தயத்திற்கு, கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த தமிழக முதல்வர், மத்திய அரசிடமிருந்து நிதி வராததை காரணம் கூறி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது, கடும் கண்டனத்திற்குரியது.

மாநில அரசின் நிதியிலிருந்து, ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் உட்பட, 32,500 பேருக்கு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us