புது மருத்துவ கண்டுபிடிப்புகள் இதய சிகிச்சையின் நம்பிக்கை
புது மருத்துவ கண்டுபிடிப்புகள் இதய சிகிச்சையின் நம்பிக்கை
UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:40 AM
சென்னை:
இதய மருத்துவ துறையில் அறிமுகமாகி உள்ள புதிய கண்டுப்படிப்புகள், நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையின், இதய அறிவியல் துறை இயக்குனர் டி.ஆர்.முரளிதரன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
உலகளவில் ஏற்படும் மரணத்திற்கு, இதய நோய்கள் அதிக காரணமாக உள்ளது. அவற்றில் மாரடைப்பு குறிப்பிடத்தக்க பாதிப்புகளில் ஒன்று.
ரத்த நாளங்களில், கால்சியம் படிமம் சூழ்ந்து மாரடைப்பு ஏற்படும்போது, திறந்த நிலை அறுவை சிகிச்சை சாத்தியம் என்ற நிலை இருந்தது. தற்போது, பி.சி.ஐ., ஐ.வி.எல்., டி.இ.பி., போன்ற இதய இடையீட்டு சிகிச்சை வாயிலாக தீர்வு காணும் நவீன நுட்பகங்கள் வந்து விட்டது.
இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள், உயிர்களை காப்பதோடு மட்டுமின்றி, லட்சகணக்கான நோயாளிகளின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
மரபணு, தனிநபர் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறைகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் மேம்படும் பட்சத்தில், இதயநல சிகிச்சைகளில் இன்னும் பல்வேறு சாதனைகளை எட்ட முடியும்.
இவ்வாறு டி.ஆர்.முரளிதரன் கூறினார்.