மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!
மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!
UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:39 AM
சென்னை:
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவி காலியாக இருந்தது. இதனை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
அந்த பட்டியல் பின்வருமாறு:
முதல்வர்: லியோ டேவிட், கீழ்ப்பாக்கம்; முதல்வர்: பவானி, கள்ளக்குறிச்சி; முதல்வர்: ரவிக்குமார், ஈரோடு; முதல்வர்: குமரவேல், திருச்சி; முதல்வர்: சிவசங்கர், செங்கல்பட்டு; முதல்வர்: ரோகிணி, வேலூர்; முதல்வர்: ராமலட்சுமி, கன்னியாகுமரி; முதல்வர்: அருள் சுந்தரேஷ் குமார், மதுரை; முதல்வர்: அமுதா ராணி, ராமநாதபுரம், முதல்வர்: கலைவாணி, புதுக்கோட்டை; முதல்வர்: முத்துச்சித்ரா, தேனி; முதல்வர்: லோகநாயகி, கரூர் ; முதல்வர்: ஜெயசிங், விருதுநகர் ; முதல்வர்: தேவி மீனாள், சேலம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.