UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:25 AM
கோவை:
பழுதடைந்த பள்ளி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.,புரம் பூமார்க்கெட் அருகே தேவாங்கப்பள்ளி எதிரே மாநகராட்சி ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படித்து வருகிறன்றனர். இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்தில், 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பழுதடைந்த கட்டடம் பூட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மழை காலம் துவங்குவதற்கு முன் சேதம் அடைந்த கட்டடங்களை இடித்து அகற்றி வருகிறது. பழுதடைந்த தனியார் கட்டடங்களுக்கு நோட்டீசும் விநியோகித்து வருகிறது.
இதையடுத்து பல மாதங்களாக பூட்டப்பட்டு இருந்த, பழுதடைந்த பூமார்க்கெட் மாநகராட்சி ஆரம்ப பள்ளி கட்டடத்தை கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தியது. புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.