வால்பாறை கல்லுாரி பாலியல் புகாரில் துறை ரீதியான நடவடிக்கை : கலெக்டர்
வால்பாறை கல்லுாரி பாலியல் புகாரில் துறை ரீதியான நடவடிக்கை : கலெக்டர்
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 10:28 AM

கோவை :
கோவை கலெக்டர் அலுவலகத்தில், தேசிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.
பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள், குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்தால் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு தேவையான உணவு பொருட்கள், அங்கன்வாடிகள் வாயிலாக அளிக்கப்படுகின்றன.
குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகப்பேறு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங் களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
வால்பாறை அரசு கல்லூரி பாலியல் புகார் குறித்து, சமூக நலத்துறை குழு விசாரணை நடத்தியுள்ளது. அதன்படி, புகார்தாரர் மட்டுமின்றி, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வால்பாறை விவகாரத்தில் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாலியல் சார்ந்த புகார்களை, எதிர்மறையாக பார்க்கக் கூடாது. மாணவிகள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்கள் பொது வெளியில், கல்வி வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பஸ்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், இரவில் அனைத்து பகுதிகளையும் வெளிச்சம் உள்ள பகுதிகளாக மாற்றவும் கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்துஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.