தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் சார்பில் பேச்சுப்போட்டி; பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

தினமலர் சார்பில் பேச்சுப்போட்டி; பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

தினமலர் சார்பில் பேச்சுப்போட்டி; பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : டிச 10, 2024 12:00 AM

ADDED : டிச 10, 2024 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2024 12:00 AM ADDED : டிச 10, 2024 10:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தினமலர் நாளிதழ், இந்திய நீர்ப்பணிகள் சங்கம், எய்ம் தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில் நடத்தப்படும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளன. ஒரு பள்ளியில் இருந்து, அதிகபட்சமாக ஆறு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். மாணவர்கள் கருத்துக்களை தமிழில், மூன்று நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.

முதற்கட்ட போட்டிகள் வரும், ஜன., 4ம் தேதி குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியிலும், பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியிலும் நடக்கின்றன.

ஜன., 5ம் தேதி பொள்ளாச்சி, பி.ஏ., இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியிலும், ஈச்சனாரி ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்திலும் நடக்கின்றன. முதற்கட்ட போட்டியில், 'நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னுடைய நவீன சிந்தனைகள்' என்ற தலைப்பில், மாணவர்கள் பேச வேண்டும்.

முதற்கட்டப்போட்டியில் இருந்து, 200 மாணவர்கள் இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிச்சுற்று போட்டி, ஜன., 11ம் தேதி ஈச்சனாரி ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் மாணவர்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் நம்முடைய பங்கு என்ற தலைப்பில் பேச வேண்டும்.

என்ன பரிசு?


எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பிரிவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, ரூ.7,000, இரண்டாம் பரிசாக, ரூ.5,000, மூன்றாம் பரிசாக, ரூ.3,000 வழங்கப்படும்.

பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ரூ.7,500, மூன்றாம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படும்.

பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதற்கட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட போட்டிக்கு தகுதி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க, https://forms.gle/fVLeVjLgidXvMLc4A என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது கொடுக்கப்பட்ட க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். வரும், 30ம் தேதி இரவு, 9:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் கிடையாது. மேலும் விபரங்களுக்கு, 94430 39839 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us