புயலால் மதிப்பெண் சான்றிதழ் இழந்த மாணவர்கள் மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்
புயலால் மதிப்பெண் சான்றிதழ் இழந்த மாணவர்கள் மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : டிச 10, 2024 12:00 AM
ADDED : டிச 10, 2024 10:21 AM

சென்னை:
பெஞ்சல் புயலால் மதிப்பெண் சான்றிதழ்கள் இழந்த மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தாங்கள் இழந்த சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏது செலுத்த தேவையில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.