தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்தால் பட்டம்; வென்றால் பரிசு

படித்தால் பட்டம்; வென்றால் பரிசு

படித்தால் பட்டம்; வென்றால் பரிசு


UPDATED : அக் 29, 2026 01:22 PM

ADDED : அக் 29, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 01:22 PM ADDED : அக் 29, 2026 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியும் இணைந்து 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி வினா போட்டியை, திருப்பூர், முருகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.

புத்தகத்துக்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு காட்டவே 'பட்டம்' மாணவர் பதிப்பு. வாசிப்பு ஆர்வத்தை துாண்டவே இந்த வினாடி வினா.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் கலந்துகொண்டு தங்கள் பொது அறிவை வெளிப்படுத்துகின்றன. பள்ளி அளவில் வெல்பவர்கள் அரையிறுதிக்கும், அரையிறுதியில் வெல்பவர்கள் இறுதிப் போட்டிக்கும் செல்கிறார்கள்.

இன்று நடந்தது அரையிறுதிச் சுற்று. இடம்: திருப்பூர் பி.என். ரோடு கூத்தம்பாளையம் பிரிவில் உள்ள முருகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 290 மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அதிக மதிப்பெண் எடுத்த 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் 'பி' அணியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் பிரனீஷ், பிரதீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளி தாளாளர் பசுபதி பதக்கமும் சான்றிதழும் வழங்கினார். சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்குகின்றன.

வாசிப்பை அறிவாகவும், அறிவைத் தன்னம்பிக்கையாகவும் மாற்றும் 'பட்டம்' இதழின் முயற்சிக்கு இந்த வினாடி வினா போட்டி மற்றுமொரு சான்றாக அமைந்தது.

பல விஷயங்கள்

'பட்டம்' இதழால் பொது அறிவு, விளையாட்டு, உடல் நலம் என பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது

- பிரதீஷ், மாணவர்.

வெளியுலக அறிவு

போட்டியில் பங்கேற்றது சந்தோஷம் தருகிறது, 'பட்டம்' இதழ் படிப்பதால் வெளியுலக அறிவு கிடைக்கிறது.

- பிரனேஷ், மாணவர்.

புதிய சமுதாயம்

பட்டம் இதழை ஆழமாக படியுங்கள், அறிவு மேம்படும்போது புதிய சமுதாயம் மலரும்.

- பசுபதி, பள்ளி தாளாளர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us