நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா
நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா
UPDATED : அக் 29, 2026 01:24 PM
ADDED : அக் 29, 2026 01:24 PM
விழுப்புரம்:
'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி விழுப்புரம் மருத்துவமனை வீதி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 16 மாணவர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சத்தியபாமா முன்னிலை வகித்தனர்.
போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் ஷண்மதி, வேதஸ்ரீ முதலிடமும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ராகுல், திகழ்வன் இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கோவிந்தன் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பள்ளிக்கு விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி கல்விக்குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டு வருகிறது.
